கோவை, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வாழ்த்து கிளாஸ்கோ- 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளது. நமது விளையாட்டு வீரர்கள் ஈடு இணையற்ற உறுதி, மனவுறுதி மற்றும் சிறப்பை வெளிப்படுத்தி 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக 39 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தனர். ஒவ்வொரு பதக்கமும் வளர்ந்து வரும் இந்தியாவின் உணர்விற்குச் சான்றாகும். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், பயிற்சியாளருக்கும் மற்றும் துணைப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/commonwealth-games-india-4th-with-39-medals-vanathi-srinivasan-congratulations




