சென்னை, பயணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு கோவை - ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சிறப்பு ரெயில் கோவையில் இருந்து ஆகஸ்டு - 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06181) 3-வது நாள் மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரை சென்றடையும். மறுமார்க்கத்தில், ஜெய்ப்பூரில் இருந்து ஆகஸ்டு 16, 23, 30, செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.05 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06182) 4-வது நாள் காலை 8.30 மணிக்கு கோவையை வந்தடையும். 20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (6-8-2026) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-coimbatore-jaipur-operation-via-tiruppur-erode-salem




