ஐதராபாத், விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீதும் இறைச்சி துண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இந்து மதப்பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் நிறைவாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இறைச்சி துண்டுகள் வீச்சு இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மண்டனபேட் பகுதியில் நேற்று இரவு விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து இறைச்சி துண்டுகள் விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது வீசப்பட்டன. இறைச்சி துண்டுகள், எலும்பு துண்டுகள் வீசப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 3 பேர் கைது இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அடுக்கு மாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது இறைச்சி, எலும்பு துண்டுகளை வீசிய இம்ரான் குரேஷி, அர்ஷியா பேகம், சபீனா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/meat-pieces-thrown-on-vinayagar-idol-procession-shocking-incident




