புது டெல்லி, இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரியாக சக்தி ஷர்மா பொறுப்பு ஏற்று கொண்டார். இது தொடர்பாக, மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- விமான படை தலைமை அதிகாரி இந்திய விமானப்படை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா, இந்திய பாதுகாப்பு படைகளில் ஏர் வைஸ் மார்ஷல் அல்லது அதற்கு இணையான பதவியை அடைந்த மருத்துவம் சாராத முதல் பெண் அதிகாரி ஆனார்.நேற்று, சக்தி சர்மா விமானப்படை தலைமையகத்தில் விமானப் படை தலைமை அதிகாரியின் (கல்வி) உதவி தலைவராக பொறுப்பேற்றார். சக்தி ஷர்மா 1994 ஜூன் 18 அன்று இந்திய விமானப்படையின் கல்வி பிரிவில் அதிகாரியாக பொறுப்பேற்ற சக்தி ஷர்மா, பயிற்சி நிறுவனங்கள், கள நிலையங்கள், கட்டளை தலைமையகங்கள், விமானப்படை தலைமையகங்கள் என பலதரப்பட்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார். சக்தி ஷர்மா புதிய அத்தியாயம் இந்த மைல்கல் சாதனை, இந்திய பாதுகாப்பு படைகளில் பெண் அதிகாரிகளின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/shakti-sharma-assumes-charge-as-indian-air-forces-first-woman-officer




