நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் எங்கு பார்த்தாலும் அதிக இரைச்சல் இருக்கிறது. இந்த ஒலி அதிகமாகும்போது தேவையற்ற உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கேள்விக் குறைபாடு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், தூக்கக் குறைபாடு மற்றும் வேலைகளில் ஈடுபாடின்மை ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் மனதளவிலும் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த இரைச்சல் நிறைந்த வாழ்க்கைக்கு மத்தியில், பூமியில் மிகுந்த அமைதலான இடங்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த தொகுப்பில் காணலாம். ஹலேகலா பள்ளம், ஹவாய் பெரிய செயலற்ற எரிமலை பகுதியான இது, ஆண்டுதோறும் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அதன் அழகையும், பசுமையான இடத்தையும் காண மக்கள் இங்கு வருகை தருகிறார்கள். மேலும் இந்த இடத்தை தனித்துவமாக்குவது இங்கு நிலவும் அமைதிதான். வனவிலங்குகள் இல்லாமை மற்றும் தரிசு பாறை நிலப்பரப்பு ஆகியவை இந்த இடத்தில் அமானுஷ்ய அமைதி நிலவ காரணமாக அமைகிறது. அண்டார்டிகா சாகசப் பிரியர்கள் அனைவருக்கும் ஏற்ற இடம் அண்டார்டிகா. நிரந்தர மக்கள் வசிக்காத இடமான இது, விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தாயகமாக விளங்குகிறது. அவர்கள் காலநிலை மாற்றம் முதல் பூமியின் அனைத்து தீவிரமான சூழல்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்த கண்டம் முழுவதும் அமைதி பரவியுள்ளது. இது வேறு உலகத்தில் வசிப்பது போன்ற அனுபவத்தை மக்களுக்கு தருகிறது. கெல்சோ டூன்ஸ், கலிபோர்னியா கலிபோர்னியாவில் உள்ள கெல்சோ டூன்ஸ், மொஜாவே பாலைவனத்தில் அமைந்துள்ள பெரிய மணல் குன்றுப் பகுதியாகும். 600 அடிக்கு மேல் உயரமாக காணப்படும் இந்த பிரம்மாண்டமான மணல் மேடுகள் மலையேறுபவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சாகச இடமாக விளங்குகிறது. உலகின் மிகவும் அமைதியான இடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த இடம் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பை கேட்கும் அளவுக்கு அமைதியாக இருக்கிறது. தக் பீ ஹா செனோட், மெக்சிகோ மெக்ஸிகோவின் யுகடான் தீபகற்பத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தக் பீ ஹா செனோட், சுற்றுலா பயணிகளுக்கு அமைதியான அனுபவத்தை தருகிறது. நன்னீரால் நிரப்பப்பட்ட இயற்கை புதைகுழிகளுக்கு இந்த இடம் பெயர் பெற்றது. பரப்பரப்பான வெளி உலக வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கு இந்த அமைதியான இடம் தனித்துவமான அனுபவத்தை தருகிறது. லேண்ட்மன்னலாகர், ஐஸ்லாந்து பஜல்லாபக் இயற்கை காப்பகத்தின் மையத்தில் அமைந்துள்ள லேண்ட்மன்னலாகர், அதன் வியத்தகு இயற்கை காட்சிகள், மலைகள் மற்றும் புவிவெப்ப வெப்ப நீரூற்றுகளுக்கு பெயர் பெற்றது. லேண்ட்மன்னலாகர் அமைதியான தனிமை உணர்வை மக்களுக்கு தருகிறது. தனித்துவமான இயற்கை காப்பகமான இதில், எரிமலைக் குழிகள், வெந்நீர் ஊற்றுகள், பனிப்பாறைகள் ஆகியவை காணப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/are-you-a-peace-loving-person-then-you-can-go-on-a-trip-here




