மும்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முழுநேர தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் தலைமையில் சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனால் அவர் ஆசிய விளையாட்டுக்கு பயிற்சியாளராக செயல்பட முடியவில்லை. இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஒருநாள் தொடர் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்குகிறது. ஆசிய விளையாட்டில் ஆடவர் அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மகளிர் அணிக்கு அமோல் மஜும்தார் தலைமைப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-vvs-laxman-appointed-as-coach-of-the-indian-cricket-team




