சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமின் நிறைவுநாளான இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். யிற்சி முகாமில் பங்கேற்பு அவரை காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் வரவேற்கிறார்கள். பின்னர் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார். அதேபோன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. பின்னர் சென்னை வந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-visits-tamil-nadu-today-to-participate-in-a-congress-training-camp




