லண்டன், லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் முன்னாள் சாம்பியன் நோவக் ஜோகோவிச் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமேவை ஜோகோவிச் எதிர்கொண்டார். 5 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் 7-6 (10), 3-6, 6-3, 6-7 (4), 7-6 (10-4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச் போராடி வெற்றி பெற்றார். இந்த போட்டி விம்பிள்டன் வரலாற்றிலேயே ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் மிக நீண்ட நேரம் நடைபெற்ற ஆட்டம் என்ற புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், மெஸ்ஸியை போல 90 நிமிடங்கள் கால்பந்து விளையாடுவது நன்றாக இருக்கும் என ஜோகோவிச் கிண்டலாக தெரிவித்துள்ளார். 5 மணிநேரத்திற்கும் மேல் டென்னிஸ் விளையாடுவதை விட மெஸ்ஸியை போல 90 நிமிடங்கள் விளையாடுவது நன்றாக இருக்கும் என ஜோகோவிச் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/tennis/it-would-be-great-to-play-like-messi-djokovic




