செயற்கை நுண்ணறிவு (AI) தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால், அது உலகம் முழுவதும் சுமார் 100 கோடி மக்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். சமீபகாலமாக OpenAI, Anthropic போன்ற முன்னணி AI நிறுவனங்களால் தங்களது தொழில்நுட்ப மாடல்களைக் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லையோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலிய பொது சுகாதாரத் துறையின் இணையதளத்தை OpenAI அமைப்பு ஒன்று ஹேக் செய்து தாக்குதல் நடத்தியதும், அத்தாக்குதல் நடந்து பல மாதங்கள் வரை ஆஸ்திரேலிய அரசுக்கு OpenAI நிறுவனம் தகவல் தெரிவிக்காததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பில்கேட்ஸ் அதேபோல், ஏமனில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி ஆயுதப் படையினர், Anthropic நிறுவனத்தின் Claude AI மாடலைப் பயன்படுத்தி ஏவுகணைகளை வழிநடத்தும் மென்பொருளை உருவாக்க முயன்றதாக Anthropic நிறுவனம் தெரிவித்துள்ளது. சிலிக்கான் வேலி மற்றும் பொதுமக்கள் மத்தியில் AI குறித்த அச்சமும் எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் AI கட்டுப்பாடுகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். AI குறித்த பாதுகாப்பு அச்சங்களை போலிப் பிரசாரம் என்று வர்ணித்துள்ள அவர், இத்தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய திட்டங்களை நிராகரித்துள்ளார். இதற்கிடையே, ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் மற்றும் Anthropic தலைவர் தாரியோ அமோடே ஆகியோர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றுகையில், ``சர்வதேச அளவில் AI பாதுகாப்பு விதிகளை வகுக்க அமெரிக்கா தலைமைத் தாங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும், நியூயார்க்கில் நடந்த ட்ரம்ப் - சீனா அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பில் AI கட்டுப்பாடுகள் குறித்து எவ்வித உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை. பில்கேட்ஸ் இந்த நிலையில்தான் NBC News சேனலுக்கு பில்கேட்ஸ் பேட்டியளித்திருக்கிறார். அதில், ``மனித குலத்தில் 100 சதவீதப் பேரையும் பாதிப்பது கடினம் என்றாலும், தவறான எண்ணம் கொண்ட மனிதர்கள் அதிநவீன AI கருவிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு பேராபத்துமிக்க பேரழிவு ஆயுதம் இதுவரையிலும் உருவாக்கப்பட்டதில்லை. AI தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால், ஒரே நிகழ்வில் சுமார் 100 கோடி மக்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது. எனவே, இத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அரசுகள் கடுமையான விதிகளைக் கொண்டுவர வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். மனிதகுலத்துக்கு எமனாகிறதா AI? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/technology/bill-gates-has-voiced-strong-criticism-regarding-ai



