மதுரை, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள இந்த புதிய படத்தின் பூஜை, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகில் உள்ள மாரநாடு கருப்புசாமி கோவிலில் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், ‘ஓம்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்திலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படம் தனுஷின் 56-வது படமாக உருவாகிறது. மதுரை வந்த தனுஷ் இந்நிலையில், புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையில் பங்கேற்பதற்காக நடிகர் தனுஷ் விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனுஷை வரவேற்க திரண்ட ரசிகர்கள், அவருக்கு மாலை அணிவித்து, கையில் வேல் மற்றும் மலர்க்கொத்து வழங்கினர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட தனுஷ், காரின் சன்ரூப் வழியாக நின்றபடி கையசைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கருப்புசாமி கோவிலில் பட பூஜை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள இந்த புதிய படத்தின் பூஜை, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகில் உள்ள மாரநாடு கருப்புசாமி கோவிலில் நடைபெற உள்ளது. இந்த பூஜையில் பங்கேற்பதற்காக தனுஷுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் வந்துள்ளார். 18 அடி உயர அருவாள் காணிக்கை புதிய படத்தின் பூஜையை முன்னிட்டு மாரநாடு கருப்புசாமி கோவிலில் 18 அடி உயர அருவாள் காணிக்கையாக செலுத்தப்பட உள்ளது. மேலும், ரசிகர்களுக்காக 16 கிடாக்கள் வெட்டி விருந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படத்தின் பூஜை நிகழ்வை முன்னிட்டு தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/grand-welcome-for-dhanush-in-madurai-he-is-participating-in-the-pooja-for-his-new-film




