பெங்களூரு, கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதிக்குள் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அமலாக்கத்துறை சோதனை பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளியின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். என்னை பொறுத்தவரையில் சதீஸ் ஜார்கிகோளி எந்த தவறும் செய்யவில்லை. சட்டத்துக்கு உட்பட்டு அவர் தொழில் செய்கிறார். வெளிநாட்டில் தொழில் செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளதா? இதில் அரசியல் உள்ளது. இன்னும் 3, 4 பேர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறலாம். காங்கிரஸ் கட்சியை சிக்கவைக்க திட்டமிட்டு வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது இல்லை. வந்தே மாதரம் பாடல் விஷயத்தில் எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. ஆனால் இதில் பா.ஜனதா அரசியல் செய்கிறது. சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வன ஊழியர்கள் தியாக தினத்தையொட்டி காடுகளில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு இன்று (நேற்று) மரியாதை செலுத்தினேன். யாராவது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தால், அதை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு வருகிற நவம்பர் 1-ந் தேதி வரை கால அவகாசம் வழங்குகிறோம். மன்னிப்பு கடிதம் வழங்கி துப்பாக்கியை ஒப்படைக்கலாம். உரிய காலக்கெடுவுக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுய பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்பட்டால் அத்தகையவர்கள் முறைப்படி விண்ணப்பித்து அதற்கான உரிமம் பெற வேண்டும். ஆனால் உரிய உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளால் தான் வன ஊழியர்கள், ஏராளமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். சட்டசபை மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கை குறித்து விவாதிக்க நாங்கள் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டியுள்ளோம். இதில் வறட்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/firearms-can-be-surrendered-along-with-a-letter-of-apology-karnataka-chief-minister-announces



