துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன வங்காளதேசம் - ஐக்கிய அரபு அமீரகம் பெண்கள் ஆசிய கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. டாஸ் இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-uae-choose-to-bowl




