திருப்பூர், சினிமாவில் தான் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் வில்லன் என விஜய்யை டிடிவி தினகரன் விமர்சித்து பேசியுள்ளார். டிடிவி தினகரன் விமர்சனம் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இன்று செய்தியாளரை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது:- முதல் - அமைச்சர் விஜய் பிரசாரத்திற்காக அங்கும் இங்கும் சுற்றி திரிகிறார். ஜோசியர் சொன்னால் இரவு கூட சுற்றித் திரிய தயங்க மாட்டார். நாளை தாராபுரத்திலும் சுற்றித் திரிவார். தவெகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அவர்களது கட்சியே அவர்கள் தோல்விக்கு வழிவகுக்கும். இந்த தேர்தலை திணித்ததே விஜய் தான். ஒரு தவறான முன்னுதாரனத்தை தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளார். தற்போது இரட்டை இலையிடம் வசமாக மாட்டியுள்ளார். இந்த தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவது இரட்டை இலை தான். ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை என்று கூறிய தவெகவினர் சேலத்தில் பல தொகுதிகளில் காசு கொடுத்துவிட்டு பொய் கூறியுள்ளனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன விஜய் ரசிகர்களா? விஜய் ரசிகர் மன்ற தலைவர்களா? மந்திரி பதவி தருவதாக ஏமாற்றி கட்சிக்கு அழைத்து சென்றுள்ளார்கள். பிரசாரத்தில் சத்தியபாமா அழுதது நடிப்பு. விஜய் சினிமாவில் தான் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் அவர் பெரிய வில்லன் என்பதை அவர் நிரூபித்து வருகிறார். இந்த தேர்தலில் அது வெளிச்சத்திற்கு வரும். மக்கள் பணத்தை தொடமாட்டோம் தொட்டவர்களையும் விட மாட்டோம் என்று கூறினார்கள். பதவிக்கு வந்த மூன்று மாதங்களில் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? பட்டு வேட்டி பட்டு சட்டை போட்டு மைனர் போல் திரிந்தவுடன் மக்கள் கொஞ்சம் ஏமாந்து வாக்கு செலுத்திவிட்டார்கள். தற்போது நீங்கள் யார் என்பது தெரிந்துவிட்டது. இந்த தேர்தலில் அது வெளிச்சத்திற்கு வரும். இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-is-a-hero-in-cinema-a-villain-in-real-life-ttv-dhinakaran-review




