மதுரை, மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரெயில் நிலையத்தை தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன. மதுரை மாவட்டம் சோழவந்தானின் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் மர்ம நபரால் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை சோழவந்தான் தபால் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளும் நேற்று அழிக்கப்பட்டன. நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெறும் இந்த நிலையில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டிருப்பத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணை ஒரே நேரத்தில் தபால் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் ஆகிய இரண்டு மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டதால், ரெயில்வே போலீசாரும் உள்ளூர் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/hindi-script-defaced-at-the-sholavandan-post-office-following-a-similar-incident-at-the-railway-station




