புதுடெல்லி, மாநில வேளாண் அமைச்சர்கள் மற்றும் மாநில துறைச் செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காணொலி வாயலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா மற்றும் கிருஷ்ணோன்னதி யோஜனா ஆகிய இரண்டு முக்கிய வேளாண்திட்டங்களின் கீழ், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ.1,183.11 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.355.88 கோடி விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.409.40 கோடி, ஒடிசாவுக்கு ரூ.219.65 கோடி, உத்தரகாண்ட் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு முறையே ரூ.106.67 கோடி மற்றும் ரூ. 91.51 கோடி விடுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/central-government-approves-allocation-of-rs-35588-crore-to-tamil-nadu-for-agricultural-schemes




