சென்னை, திமுகவின் சாதனைகளை இப்போதாவது ஒத்துகொண்ட முதலமைச்சருக்கு நன்றி என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பூஜ்ஜியமாக இருக்கிறது. தவெக ஆட்சியால் விவசாயிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாகத்தான் இருக்கிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என்ற தெளிவு இல்லை. தங்க மோதிரம் திட்டம் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வாக்குறுதியில் சொன்னபடி நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் தருவதாக முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். ஆனால் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது" ஆட்சிக்கு வரும்முன் மாற்றம் என்றனர். என்ன மாற்றம் எனப்பார்த்தால் பெயர் மாற்றம் மட்டும்தான் நடந்திருக்கிறது. முந்தைய திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாகத்தான் இருக்கிறது. திமுக கொண்டு வந்த பெரும்பாலான திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பெயரைத்தான் மாற்றியிருக்கிறார்கள் அம்பேத்கர் கல்வி திட்டம், ஒலிம்பிக் திட்டம், முதல்-அமைச்சர் படைப்பகம் உள்ளிட்டவை திமுகவின் திட்டங்கள் தான்.மடிக்கணினி, வீடு வழங்கும் திட்டங்கள் என திமுகவின் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றி உள்ளனர். `அன்பு சோலை' என நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு `முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்' என்றும் `உலகம் உங்கள் கையில்' என்ற லேப்டாப் திட்டத்துக்கு `வெற்றி மடிக்கணினி திட்டம்' என்றும் `கலைஞர் கனவு இல்லம்' திட்டத்துக்கு `வெற்றி வீடு திட்டம்' என்றும் `முதல்வர் படிப்பகங்கள்' திட்டத்துக்கு `டிஜிட்டல் நூலகம்' என்றும் `நன்னிலம்' திட்டத்துக்கு `மண்ணின் மகள் திட்டம்’ என்றும் பெயரை மாற்றியிருக்கிறார்கள்" திமுக கொண்டு வந்த திட்டத்துக்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள்? மேகதாது அணையை கட்டும் கர்நாடகாவை கண்டிக்க இந்த ஆட்சிக்கு வக்கில்லை. எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் சொல்ல தீர்மானம் கொண்டுவருவார்களாம்.பதில் சொல்லாத முதல்-அமைச்சர் எதற்காக சட்டமன்றத்துக்கு வர வேண்டும் என தெரியவில்லை. வீடு புகுந்து கைது செய்தார்கள் "காவிரியில் தண்ணீர் வரவில்லை, ஆடிப்பெருக்கில் கூட தண்ணீர் வரவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூலையில் காவிரியில் நீர் இல்லை என நாளிதழில் வந்துள்ளது. இந்த ஆட்சி அமைந்ததில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் தான். தஞ்சையில் நடந்த ஆர்பாட்டத்தில் இந்த பிரச்சினைகளை நான் பேசினேன், அதற்காக என்னை வீடு புகுந்து கைது செய்தார்கள். விவசாய பிரச்சினைகளை மடைமாற்றவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தி சிரிக்கிறது தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கடந்த 5 வாரங்களில் 4 காவல் மரணங்கள் நடந்துள்ளன. 5 ஜாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. ரெடியா இருங்க நடக்கும் கூட்டத்தொடர் முழுவதும், உறுதியாக மக்கள் பிரச்சினைகளை கேள்வி எழுப்ப ரெடியாக இருக்கிறோம். பதில் சொல்ல இந்த அரசு ரெடியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-budget-is-a-huge-zero-budget-udhayanidhi-stalin-criticizes




