முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/consultative-meeting-of-tvks-allied-parties-leaders-of-coalition-parties-participated
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
https://www.vikatan.com/government-and-politics/consultative-meeting-of-tvks-allied-parties-leaders-of-coalition-parties-participated

மதுரை மனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டன. ஆனால், நீண்ட காலமாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தகுதி, அனுபவம் மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அரசியல் கட்சியினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தற்போது காங்கிரஸ் மேலிடம் தமிழகத்தில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் யார் யாரை வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்ற தனது தரப்பு பட்டியலை தமிழக அரசுக்கு வழங்கி உள்ளது. அது சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. இதனால் பல தகுதியான வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதோடு, தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் உத்தரவு இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ''முறையாக அறிவிப்பானை வெளியிடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது'' எனத் தெரிவித்தனர். இதைக் கேட்ட நீதிபதிகள், "அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தேர்வுக் குழு அமைத்து விண்ணப்பங்கள் பெற்று நியமனங்கள் செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்கின்றனர். எனவே அரசு வழக்கறிஞர் நியமன பொருத்தவரை அரசு நேர்மையாக நடந்து கொள்ளும் என நீதிமன்றம் நம்புகிறது" எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் தவெக தேனீர் விருந்தைப் புறக்கணிக்க காரணம் என்ன? - சிபிஐ வீரபாண்டியன் விளக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
இன்று அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர். இந்த நிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,``தற்போதைய த.வெ.க அரசு பொருந்தாத கூட்டணி ஆட்சி நடத்துகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் இதர கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலிலும், முந்தைய சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க-வின் உதவியோடுதான் வெற்றி பெற்றன. திருச்சி தொகுதியில் துரை வைகோ வெற்றி பெற்றதற்கும் தி.மு.க-வின் உழைப்பும், அதன் சின்னமும்தான் காரணம். முன்பு அ.மு.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட காமராஜ், தவெக-வுக்கு ஆதரவு எனக் கடிதம் கொடுத்தபோதே குதிரைப் பேரம் நடந்ததாக ஆளுநரிடம் புகார் அளித்தோம். முதல்வர் விஜய் வைகோ வைக்கும் குற்றச்சாட்டுகளும், அவர் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதற்குச் சொல்லும் காரணமும் அவரே அவர் தகுதியைக் குறைத்துக்கொள்ளும் வகையில் இருக்கின்றன. இது எனக்கு வருத்தமாக இருக்கிறது. தற்போது பதவி ஆசைக்காகவும், தவறான வாக்குறுதிகளை நம்பியும் 25-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை விஜய் தங்கள் பக்கம் இழுத்துள்ளார். அ.தி.மு.க-வால் பலமுறை அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ-க்களாகவும் இருந்துவிட்டு, இப்போது தலைமை சரியில்லை என்று கூறி தவெக-விற்கு ஆதரவு அளிப்பது அவர்களின் சுயநலத்தையே காட்டுகிறது. 2017-ல் என்னை அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றினாலும், ஜெயலலிதாவின் தொண்டன் என்ற முறையில் கடினமான சூழ்நிலையிலும் அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க உறுதியாகத் தொடரும். முந்தைய ஆட்சியில் ஊழல் வழக்குகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களைத் தற்போது கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள். மாதாந்திர மின்சாரக் கணக்கீடு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளனர். தவெக தொண்டர்கள் விவசாயக் கடன் ரத்து, கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, தற்போது அதற்கு நீட்டிப்பு வழங்கியது எனக் குழப்பமான அரசாகவே இயங்குகிறது. மனிதவளத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியபோது, அது மாத்திரை எனக் கூறியது, ஸ்டாலினைப் பார்த்து, அரசியலுக்கு வந்து சில மாதங்களேயானவர்கள் விமர்சிப்பது என அற்பமான அரசியலில் ஈடுபடுகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் நெல்லைத் தவிர வேறு பயிர் நட முடியாது என்ற எதார்த்தம் கூடத் தெரியாமல் அமைச்சர்கள் தற்குறித்தனமாகப் பேசுகிறார்கள். எந்தத் துறைக்கு எந்த அமைச்சர் என்று தெரியாத அளவிற்கு நிர்வாகக் குழப்பம் நீடிக்கிறது." என்றார். "தவெக செய்வது Horse Trading அல்ல, Horse Racing" - பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் சுமார் 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதன் மூலம் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக பேருந்து நிலையம் உள்ளது. புதிய பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிப்பிடம் மற்றும் குளியலறைகள் செயல்பட்டு வருகின்றன. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இதனை நிர்வகிக்க டெண்டர் வைக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் இதை நிர்வகிப்பதற்கான டெண்டரை திமுக பிரமுகர்கள் சிலர் சேர்ந்து சுமார் ரூ.70 லட்சத்திற்கு எடுத்து நடத்தினர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் கட்டண கழிப்பறை ரூ.5-தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை மீறி ரூ.10 வசூலிப்பதாக புகார் எழுந்தது. புதிய பேருந்து நிலைய சுற்றுச்சுவரை ஒட்டிய பொதுவெளியில் பலரும் சிறுநீர் கழிப்பார்கள். எல்லோரையும் கழிப்பறைக்கு வர வைப்பதற்காக மாநாகராட்சி நிர்வாகம் அப்போது அலாரம் சிஸ்டத்தை அறிமுகம் செய்த நிலையில் இது சர்ச்சையாக பின்னர் எடுக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் முடிந்த பிறகும் திமுக-வினர் சாதகமாக டெண்டர் நீடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிலரிடம் பேசினோம், ''வாக்கு எண்ணிக்கை தினமான கடந்த மே 4ம் தேதியுடன் கழிப்பறைக்கான டெண்டர் காலம் முடிந்து விட்டது. உடனடியாக மாநாகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கழிப்பறையைக் கொண்டு வந்திருக்க வேண்டும். "ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது" - திமுகவை விமர்சித்த பெ.சண்முகம் அப்போது பணியில் இருந்த ஆணையர் இரண்டு முறை டெண்டர் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிட்டு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் இரண்டு முறையும் திமுக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்து டெண்டரை நடத்த விடாமல் கேன்சல் செய்து விட்டனர். அதன் பின்னர், டெண்டர் எடுத்திருந்த திமுக பிரமுகர்களுக்கு நீட்டிப்பு செய்து கொடுக்கப்பட்டது. அதுவும் கடந்த 30ம் தேதியுடன் முடிந்து விட்டது. மாநகராட்சி நிர்வாகம் தற்போது அதற்கான டெண்டரை வைத்தால் அதை எடுப்பதற்குப் பலர் தயாராக உள்ளனர். இதனால் மாநகாட்சிக்குக் கூடுதலாக வருவாய் கிடைக்கும். தஞ்சாவூர் மாநகராட்சி டெண்டர் நடத்தவில்லை என்றால் மாநகராட்சியே கட்டுப்பாட்டில் எடுத்து கழிப்பறையை நிர்வகிக்க வேண்டும் இதுதான் விதி. தவெக ஆட்சி அமைத்து 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. முதல்வராக ஜோசப் விஜய் இருந்தும் பல மாவட்டங்களில் அரசு சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் மூலமாக திமுக-வினர்தான் கோலோச்சி வருகின்றனர். இந்தக் கழிப்பறை டெண்டரை கூட திமுக முக்கியஸ்தர்கள் நடத்தவிடாமல் மீண்டும் நீடிப்பு செய்து ஆர்டர் வாங்கி அதன் மூலம் ஆதாயம் அடைந்து வருகின்றனர். முன்னாள் திமுக அமைச்சர் நேருவின் உறவினர் ஒருவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இவர் மூலம் திமுக-வினர் டெண்டரை நடத்த விடாமல் செய்து விட்டனர். ஆட்சிதான் மாறியிருக்கிறது காட்சிகள் மாறவில்லை என்பது போல் தவெக ஆட்சியிலும் திமுக-வினர் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. தவெக-வினர் இதனைக் கண்டு கொள்ளவில்லை. தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளும் திமுக-வினர் சொல்படியே நடக்கிறார்கள். தவெக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர். மாநகராட்சி தரப்பிலோ, இதுவரை புதிய டெண்டர் நடத்துவதற்கான அறிவிப்பு வராததால் ஏற்கனவே நடத்தியவர்களுக்கு நீடிப்பு செய்யப்பட்டிருக்கிறது'' என்று சொல்கிறார்கள். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவாரா: மக்கள் கருத்து? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 3 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 பேர், தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 4 பேர், ஏற்கெனவே தவெக-வில் இணைந்துள்ளனர். என்ன நடக்கிறது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
உலகம் முழுவதிலுமிருந்து சமீபத்திய செய்திக் கட்டுரைகளைப் படியுங்கள்