சென்னை, என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. அதனை தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. 3 சுற்றுகளாக பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவு ஆகியோர்களுக்கு கலந்தாய்வு கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. கலந்தாய்வு பொது பிரிவு கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட்டதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 167 இடங்கள் நிரப்பப்பட்டன. இது தவிர சிறப்பு பிரிவிலும் சில இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த சூழலில், துணை கலந்தாய்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி. 7-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வு மூலம் 8 ஆயிரத்து 985 இடங்கள் நிரப்பப்பட்டதாகவும், அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 280 பேருக்கு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தொடக்கம் இதனைத் தொடர்ந்து எஸ்.சி.ஏ.-ல் இருந்து எஸ்.சி. ஆக மாற்றுவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்குவதாக இருந்த நிலையில், அந்த கலந்தாய்வு சில காரணங்களால் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதலில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு அவகாசம் வழங்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/engineering-supplementary-counseling-concludes-8985-seats-filled




