கோவை, கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன்(வயது 19) என்ற மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அவர் சகமாணவர்களால் அமுதன் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆரமுதன் (20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த அரவிந்த் (21), தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் சிவா ரோகித் (20), பெரம்பலூர் மாவட்டம் குன்னம்பகுதியை சேர்ந்த மணி பாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்திருந்தனர். தொடர்ந்து சந்தோஷ் என்ற மற்றொரு மாணவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை வழக்கில், தற்போது மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஸ்ரீராம், ஹரீஷ் பாண்டியன் மற்றும் லலித் ஆதித்யா ஆகிய 3 பேரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-college-student-murder-case-3-more-arrested



