சென்னை, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தனவிமல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குடி தொகுதியில அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்த தன்னை தொடர்பு கொண்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் செலவுகளை செய்யக்கூடிய தகுதியை நிரூபிக்க 5 கோடி ரூபாய் தரும்படி வலியுறுத்தியதாகவும், வேட்பாளர் பட்டியல் அறிவித்த பிறகு அந்த பணத்தை திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்ததாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். அதன்படி 4 கோடி 50 லட்சம் ரூபாய் பணத்தை சி.விஜயபாஸ்கரிடம் ஒப்பந்ததாரர் மூலமாக கொடுத்ததாகவும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் செலவுகளுக்காக அந்த பணத்தை திருப்பி கேட்டபோது 50 லட்சம் ரூபாயை மட்டும் சி.விஜயபாஸ்கர் திருப்பி கொடுத்தார் எனவும், இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறை தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், மனுதாரரின் புகார் குறித்து புதுக்கோட்டை டி.எஸ்.பி. விசாரணை நடத்தியதாகவும், அந்த விசாரணையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகாரில் முகாந்தரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான பணமோசடி புகாரில் முகாந்திரம் இல்லை என்று தெரிவித்து, புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அ.தி.மு.க. வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-basis-in-the-money-laundering-complaint-against-former-minister-c-vijayabaskar-chennai-high-court




