வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 12ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்பும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது கடந்த 25ம் தேதி வரை தொடர்ந்து 13 நாட்களாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதையடுத்து இரு தரப்பும் கடந்த 26ம் தேதி முதல் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. இதனால் மத்திய கிழக்கில் அமைதி திரும்பி இருந்தது. ஈரான் தாக்குதல் இந்நிலையில், ஈரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஜோர்டான் மீது ஈரான் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை, ஈரான் ஏவிய ஏவுகணைகளை ஜோர்டான் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. ஈரானின் இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/iran-missile-attack-on-jordan




