ஸ்ரீநகர், காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் கத்துவா மாவட்டம் பஷோலி பகுதியில் நீர்மின் நிலையம் உள்ளது. இந்த நீர் மின் நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சூடு - 4 வீரர்கள் பலி இந்நிலையில், நீர் மின் நிலையத்தில் இன்று பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்புப்படை வீரர் சக வீரர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் சக வீரர்கள் அங்கித் குமார், லெட்சுமன் சிங், முகமது ரபீக், சஞ்சீவ் குமார் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த உயர் அதிகாரிகள் விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாப்புப்படை வீரரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வீரரின் பெயர் உள்ளிட்ட விவரம் வெளியாகவில்லை. அதேவேளை, சக வீரர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/4-cisf-personnel-killed-after-colleague-opens-fire-at-kashmir




