புதுடெல்லி கேரளாவை 'கேரளம்' என பெயர் மாற்றும் மசோதாவுக்கு குடியரசுதலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றுள்ளது. தீர்மானம் கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கான சட்டத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டமன்றம் 2024-ல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை பரிசீலனை செய்த குடியரசு தலைவர், அது தொடர்பான மசோதாவை கேரள மாநிலத்திற்கு அனுப்பி கருத்துக்களை கேட்டிருந்தார். இதையடுத்து அந்த மசோதாவை ஏற்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளம் இதையடுத்து கேரள மாநிலத்தின் பெயர் மாற்ற மசோதா மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாள் புதன் அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, கேரள மாநிலம் இனி 'கேரளம்' என அழைக்கப்படும். ஒப்புதல் அதன்பின் இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து பெயர் மாற்ற மசோதா சட்ட வடிவம் பெற்றுள்ளது. எனவே, கேரள மாநிலம் இனி கேரளம் என அழைக்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/keralas-name-changed-to-kerala-president-approves




