நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார், அமைச்சர் நிர்மல் குமார். அந்தச் சந்திப்பின் போது திமுக, அதிமுக, பாஜக, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து பேசியதாவது. "தற்போது திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் வரிசையாக ஆளுநரைச் சந்திப்பது அவை ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதைக் காட்டுகிறது. எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஆளுநரை முன்னிறுத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசுக்கு அவர்கள் நெருக்கடி கொடுக்க முயல்கிறார்கள். ஆனால் இந்த அரசை யாராலும் தொந்தரவு செய்ய முடியாது. அனிதா ராதாகிருஷ்ணன் கைது'யார் Boss என்று நெதன்யாகுவுக்கு தெரியும்' - ட்ரம்ப்; ஈரான் போருக்கு பின், விரைவில் சந்திப்பு! அனிதா ராதாகிருஷ்ணன் 10-ஆம் தேதி ஆஜராவதாகத் தெரிவித்திருந்தாலும், அவரது முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டபூர்வமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் தேவையில்லாமல் பேசுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது அவசியமான செயலாகும். நாங்கள் திமுகவை 'தீய சக்தி' என்று அழைப்பது, கடந்த 70 ஆண்டுகளாக அவர்கள் தமிழகத்திற்குச் செய்த துரோகங்களை அடிப்படையாகக் கொண்டதுதானே தவிர, அது தனிநபர் விமர்சனமோ அல்லது குடும்பத்தினரைப் பற்றிய தவறான பேச்சோ அல்ல. அனிதா ராதாகிருஷ்ணன் எத்தனை முயற்சிகள் செய்தாலும், பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் அவரைத் தமிழக வெற்றி கழகத்தில் எக்காரணம் கொண்டும் இணைக்க முடியாது. தென் தமிழகத்தில் அவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் செய்த நில அபகரிப்பு மற்றும் கட்டப் பஞ்சாயத்துகள் குறித்துப் பொதுமக்கள் நன்கு அறிவார்கள். திமுக தலைமை தற்போது மக்களிடம் செல்வாக்கு இல்லாத நபர்களைப் பேச வைக்கிறது". PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! - தெரிந்து கொள்ளுங்கள் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/nirmal-kumar-rejects-anitha-radhakrishnan-tvk-entry-claim




