மும்பை, நகை மோசடி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.கே. செல்வக்குமாரின் மனைவி பிந்து செல்வக்குமாரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை மோசடி தமிழில் வெளியான ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கே. செல்வக்குமார். இவரது மனைவி பிந்து செல்வக்குமார், அபிஸ் ஜுவெல்ஸ் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளை தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கே.எஸ்.செல்வக்குமார் திரைப்பட பணிகள் மட்டுமல்லாமல் மனைவியுடன் இணைந்து நகை வியாபாரமும் செய்து வந்தார். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த யூனிக் செயின் ஜூவெல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் சன்னியம் பிரேம் மேஹ்ராவிடம் இருந்து 10 கிலோவிற்கு அதிகமாக 15.34 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை எஸ்.கே. செல்வக்குமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் நகைகளுக்கான தொகையை முறையாக செலுத்தி வந்துள்ளனர். பின்னர் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை நிலுவைத் தொகைக்காக ரூ.15.34 கோடிக்கு காசோலையை வழங்கினார். அந்த காசோலை வங்கியில் பணமின்றி திரும்பியதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு பணத்தை தவணை முறையில் திருப்பி தருவதாக கூறி உறுதிமொழிப் பத்திரத்தை அளித்தும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என மேஹ்ரா தெரிவித்தார். இது குறித்து மேஹ்ரா மும்பை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் கைது மேஹ்ரா அளித்த புகாரின் பேரில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பிந்து செல்வகுமாரை பெங்களூரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய குற்றவாளியான எஸ்.கே செல்வக்குமாரை சிவானத் கும்பார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடியில் யாரெல்லாம் உள்ளார்கள் என மும்பை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/producer-sk-selvakumars-wife-arrested-in-jewellery-fraud-case




