டொராண்டோ, கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் டயானா ஸ்னைடெரை (ரஷியா) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை (ரஷியா) வீழ்த்தி வெற்றி பெற்றார். ஸ்விடோலினா அரையிறுதியில் ஸ்வியாடெக்குடன் மோத உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/canada-open-tennis-iga-swiatek-advances-to-the-semi-finals




