சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க. வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை எதிர்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், மார்ச் வரை இருந்தாலும், மாநகராட்சிகளை மட்டும் முன்கூட்டியே கலைக்க த.வெ.க. அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சிகளில் தனி அதிகாரிகளை நியமித்து, த.வெ.க., கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும், அதன்பிறகு, ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து த.வெ.க.வை சேர்ந்தவர்கள் கூறுகையில், “மாநகராட்சி, நகராட்சிகளில் தி.மு.க.வினர் நடத்திய ஊழல்களை முன்வைத்து உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க த.வெ.க. தயாராகி வருகிறது. அதனால்தான், நகராட்சி துறை டெண்டர்கள் முறைகேடு புகார் மீது அதிக கவனம் செலுத்துகிறது. இது குறித்து, முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்துக்கு த.வெ.க., மூத்த அமைச்சர்கள் கொண்டு சென்றுள்ளனர். முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்” என்று தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-gears-up-for-local-body-elections-plan-to-dissolve-municipal-corporations-ahead-of-schedule




