சென்னை, தன்னை சந்திக்க வருவோருக்கு இது கிரீன் கார்டு போல. கையில் ‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்தி இருந்தால் தன்னை எளிதில் சந்திக்கலாம் என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். "நாட்டாமை குடும்பம்" நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், தனது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைகளில் "நாட்டாமை குடும்பம்" என்று பச்சை குத்திக் கொள்ளுமாறு கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது. நடிகர் சரத்குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். திடீரென தோன்றிய சிந்தனை நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கவும் இந்த யோசனையை முன்வைத்தார். பேச்சுவார்த்தையின் போது பேசிய அவர், “எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் பச்சை குத்தும் எண்ணம். 'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது; இது நமது குடும்ப அடையாளமாக இருக்கும். என்னை சந்திக்க வருவோருக்கு கிரீன் கார்டு போல, கையில் பச்சைக் குத்து இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம் என்று தெரிவித்தார். நாட்டாமை பிம்பம் சரத்குமாரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த 'நாட்டாமை' திரைப்படத்தின் பெயரை, தனது ஆதரவாளர்களுக்கான குடும்ப அடையாளப் பெயராக அவர் தேர்ந்தெடுத்துள்ளார். நடிகர் சரத்குமாரின் இந்த பேச்சு வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் மற்றும் தொண்டர்களைக் கவர அவர் கையாண்டுள்ள இந்த பச்சை குத்தும் பிரசார உத்தி கவனிப்பைப் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-a-green-card-for-those-who-come-to-visit-me-as-a-natamai-family-sarathkumar




