மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய மெத் தயாரிப்புக் கூடம் நைஜீரியாவில் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி கைப்பற்றப்பட்ட தயாரிப்புக் கூட்டத்தில் பார்வையிட்ட பிபிசி செய்தியாளர் சிமி ஜொலாஸோ, "நான் இப்போது, மெக்சிகன் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய மெத் போதைப் பொருள் தயாரிப்புக் கூடத்தில் இருக்கிறேன். ஆனால் இது மெக்சிகோ இல்லை. தென்மேற்கு நைஜீரியாவில் ஓர் அடந்த காட்டின் நடுவே இருக்கிறேன். இதுவரை காணாத அளவில், கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் மதிப்பிலான மெத் போதைப் பொருள் மற்றும் அதைத் தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்களை அதிகாரிகள் இங்கு கைப்பற்றியுள்ளனர்" என்று அங்கு நிலவிய சூழலை விவரித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvgj8zvm304o




