கோவை, கோவையில் ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலியானார். யானை தாக்குதல் கோவை மாவட்டம் அருகே உள்ள சின்னாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 72) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக காட்டை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரென்று அவரைத் தாக்கியது. விவசாயி பலி இதில் படுகாயமடைந்த விவசாயி அலறிக் கூச்சலிட்டார். எனவே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை எச்சரிக்கை-பொதுமக்கள் கோரிக்கை பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே வராமல் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் காட்டு யானைகளை கண்டால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-farmer-killed-in-attack-by-lone-wild-elephant




