தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷிய நாட்டின் நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கான 562 மெகாவாட் கிடைப்பதில் தற்காலிக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு அணு உலைகளில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்றுவரும் நிலையில் பழுது ஏற்பட்டுள்ளது. அணு உலையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/repairs-at-kudankulam-first-nuclear-reactor



