ஹராரே, ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத் தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டி20 போட்டி அதே ஹராரேயில் இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பிறகு களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். பவுண்டரிகள், சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், சிறப்பான அரைசதம் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். மறுமுனையில் திலக் வர்மா பொறுப்புடன் பேட்டிங் செய்து அரைசதம் கடந்து இஷான் கிஷனுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்.இஷான் கிஷான் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 60 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. 220 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அந்த அணி 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-t20-team-india-defeats-zimbabwe-to-clinch-the-series




