புதுடெல்லி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மசோதாக்கள் அனைத்தும் ஒப்புதலுக்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு ஒவ்வொன்றாக அவர் ஒப்புதல் அளித்து வருகிறார். இந்தநிலையில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மேம்பாடு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா கடந்த 12-ந்தேதி மக்களவையிலும், 13-ந்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது, கனிம நிலங்களின் மீது முன்பு மாநிலங்க ளுக்கு இருந்த அதிகாரத்தை, அதாவது வரிகள் விதிக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்தி உள்ளது. கனிமவளம், சுரங்கம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதால் எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/president-gives-assent-to-mines-and-minerals-amendment-bill



