பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண் ரேஷ்மா என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களாக சகுந்தலா சரியாக வட்டி கொடுக்கவில்லை. அதோடு ரேஷ்மாவிற்குத் தெரிந்த நஷ்ரத் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். அதனைத் திரும்பக் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் ரூபாய் சகுந்தலா கொடுத்து வந்தார். ஆனால் அந்தப் பணத்தையும் சமீப காலமாக நிதி நெருக்கடியால் சகுந்தலாவால் திரும்பக் கொடுக்க முடியவில்லை. இதையடுத்து நஷ்ரத்தின் போன் நம்பரை சகுந்தலா பிளாக் செய்துவிட்டார். அதோடு வீட்டையும் காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டார். எப்படியோ நஷ்ரத், சகுந்தலாவிற்கு போன் செய்து வேலை மற்றும் பணம் கொடுப்பதாகத் தெரிவித்தார். அதனை நம்பி நஷ்ரத் வீட்டிற்கு சகுந்தலா சென்றார். அங்கு இருந்த சகுந்தலாவை ரேஷ்மாவும், அவரது கணவர் சுஹைலும் சேர்ந்து கண்டபடி திட்டி அடித்து உதைத்தனர். மேலும் சகுந்தலாவை ஆட்டோரிக்ஷாவில் ஏற்றிக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். அவருடன் ரேஷ்மாவும் நஷ்ரத்தும் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். அதோடு சுஹைலும் இன்னும் இருவர் அவர்களுடன் சென்றனர். அவர்கள் அந்த சகுந்தலாவை பெங்களூரு புறநகரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து ஆடைகளை அவிழ்த்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் சகுந்த்லாவை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டனர். வட்டியோடு சேர்த்து 11 லட்சத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை எனில் இந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிடுவோம் என்று சகுந்தலாவை மிரட்டினர். அதோடு சகுந்தலாவை ஒரு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்று வெற்று பேப்பரிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். இது தொடர்பாக சகுந்தலாவின் தாயார் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து செயல்பட்டு சகுந்தலாவை மீட்டனர். அதோடு அவரை அடைத்து வைத்து அடித்து உதைத்த ரேஷ்மா உட்பட 4 பேரைக் கைது செய்தனர். "பாபநாச அணை திறக்க போராடிய விவசாயிகளை அராஜக கைது செய்த தவெக அரசு" - கனிமொழி கண்டனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/woman-abducted-stripped-beaten-and-tortured-for-failing-to-pay-loan-interest




