துல்கர் சல்மானின்‘ஐ எம் கேம்’ படத்தின் ‘அருகே அருகே அவளும் வந்தாலே’ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. இந்த படத்தை 'ஆர்.டி.எக்ஸ்' படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘ஐ அம் கேம்’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது. அன்பறிவ் சண்டைக் காட்சிகள் என்பதால் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒருவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாக கொண்டு ‘ஐ அம் கேம்’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தை துல்கர் சல்மான், ஜாம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ‘ஐ அம் கேம்’ படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் ‘ஐ அம் கேம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. கேரளத்தின் மிகப்பெரிய பண்டிகையான ஓணம் வருகிற ஆகஸ்ட் மாதம் வருகிறது. ஒருவாரம் வரை விடுமுறை கொண்டாட்டத்தில் இருப்பார்கள் என்பதால் பல திரைப்படங்கள் ஓணம் வெளியீட்டை குறிவைத்து தயாராகி வருகின்றன. மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடன் பண்டிகை கொண்டாட்டம் இருப்பதால் வணிக ரீதியாகவும் அப்படங்கள் நல்ல வசூலைப் பெறும். இந்தாண்டு ஓணத்திற்கு நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘கலிஃபா’, நிவின் பாலி நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களும் வெளியாகவுள்ளன. முதல் பாடல் வெளியானது இந்த நிலையில், ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடலான ‘அருகே அருகே அவளும் வந்தாலே’ வெளியானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dulquer-salmaans-i-am-game-film-first-song-out




