சென்னை, 1992-ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படத்தில் தொடங்கி, மணிரத்னம்-ஏ.ஆர். ரகுமான் கூட்டணி தொடர்ந்து பல வெற்றிப்படங்களை வழங்கி இருக்கிறார்கள். இந்த கூட்டணி தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது. மணிரத்னம் இயக்கும் இந்த புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். அழுத்தமான காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஓ.டி.டி. உரிமையை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 40 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ரசிகர்கள் அந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மணிரத்னம், தனது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பைக் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளார். படத்தின் மிக முக்கியமான காட்சிகள் கொல்கத்தாவின் அடையாளமான ஹவுரா பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ந்தேதி(நாளை) வெளியாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்தது. இந்த வீடியோவில் சில தமிழ் எழுத்துகள் இடம்பெற்றிருந்த நிலையில், ரசிகர்கள் அந்த எழுத்துகளை ஒன்றிணைத்து பல்வேறு வார்த்தைகளை உருவாக்கி வருகின்றனர். அதில் ஏதேனும் ஒரு வார்த்தைதான் படத்தின் டைட்டிலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், நாளை மாலை 5 மணிக்கு டைட்டில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/mani-ratnams-new-film-title-sparks-anticipation-announcement-to-be-revealed-tomorrow-at-5-pm




