திருவனந்தபுரம் கேரளம் ஓணம் பரிசு பொருட்கள், ஆகஸ்டு 10 முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று மந்திரி அறிவித்து உள்ளார். கேரளத்தில் நடப்பு ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி ஓணம் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்களுக்கு ஓணம் பரிசு பொருட்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி கேரள உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கான மந்திரி அனூப் ஜேக்கப் இன்று கூறும்போது, காங்கிரஸ் அரசு பதவியேற்றதில் இருந்து, புதிதாக 73,024 ரேசன் அட்டைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 16 பரிசு பொருட்கள் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்காக, ஓணம் பரிசு பொருட்கள் வழங்கம் திட்டத்தினை முதல்-மந்திரி வி.டி. சதீசன் தொடங்கி வைப்பார். ஓணம் பரிசு பொருட்களுக்காக 1.65 லட்சம் டன் அரிசியும், 24,506 டன் கோதுமையும் முன்பே அரசால் ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டன. இதன்படி, புதிய பயனாளிகளுக்கு, ஓணம் பரிசு பொருட்கள் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் விநியோகம் செய்யப்படும். பிற பயனாளிகளுக்கு ஆகஸ்டு 10 முதல் விநியோகிக்கப்படும் என்றார். இதன்படி, ஒருவருக்கு தலா ரூ.854 மதிப்பில் துணிப்பை உள்பட 16 பரிசு பொருட்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/kerala-onam-gift-items-distribution-from-august-10-minister-announces



