சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தி.மு.க. முப்பெரும் விழா இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவால யத்தில்கடந்த 15ம் தேதிநடை பெறுவதாக இருந்தது., விழா நடைபெற இருந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து விழாவுக்கு மாற்று தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கியது. இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட்டன. 7 பேருக்கு விருது பெரியார் விருது - விவசாய அணி துணைச்செயலாளர் கு.செல்லப்பா, அண்ணா விருது = சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ், கலைஞர் விருது - திருச்சி சிவா, பாவேந்தர் விருது - கனிமொழி என் வி.என். சோமு பேராசிரியர் விருது -மிசா எஸ். அகமது தம்பி, மு.க.ஸ்டாலின் விருது - நா. இளையராஜா, முரசொலி செல்வம் விருது - ஊடகவியலாளர் ப. திருமாவேலன் ஆகிய 7 பேருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmks-grand-tripartite-event-mk-stalin-presented-awards-to-seven-individuals




