தீபா ஸ்ரீதர் இயக்கும் ‘தி டோர்ம்’ படத்தில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ‘சூது கவ்வும், முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா, டார்லிங்-2, மாநகரம், டிடி ரிட்டன்ஸ், கேங்கர்ஸ்’ போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் சமீபத்தில் ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி டோர்ம்’. இதில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து, பெரோஜ் என பலர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். குட் ஸ்டப் புரொடக்சன்ஸ் சார்பில் ஈ.ஆர்.டில்லி பலராமன் மற்றும் ஜெகதீஸ்வரன் டில்லி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதை விஜய் சேதுபதி அவருடைய டிவிட்டர் தளத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/munishkanths-the-dorm-film-first-look-poster-out




