சென்னை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த மாநில அளவிலான குறும்படப் போட்டி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையின் புதிய முயற்சி இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்குவது மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் காவல்துறையின் வெளிப்படையான செயல்பாட்டை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த அதிகளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF), தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக மாநில அளவிலான குறும்படப் போட்டியை நடத்துகிறது. இக்குறும்படப் போட்டியானது இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் தங்களது பங்கு மற்றும் பொறுப்பை உணர அவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறும்படங்கள் பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்: 2 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் 1. பெண்களின் பாதுகாப்பில் ஆண்களின் பங்கு 2. குற்றச் சம்பவங்களைத் தடுப்பதில் பார்வையாளரின் (Bystander)தலையீடு 3. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் சமூகத்தின் பங்கு குறும்படங்கள் தமிழில் இருக்க வேண்டும் மற்றும் 2 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பங்கேற்பு தனிநபராகவோ அல்லது 5 உறுப்பினர்களுக்கு மிகாமல் கொண்ட குழுவாகவோ இருக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் தங்களது குறும்படத்துடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தும் சான்றிதழ் (Bonafide Certificate) மற்றும் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவுக்கான Google வேண்டும். படிவத்தை " என்ற இணைப்பில் சமர்ப்பிக்க. படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 10.10.2026 ஆகும். பரிசுத் தொகைகள் முதல் பரிசு ரூ.50,000/- இரண்டாம் பரிசு - ரூ.25,000/- மூன்றாம் பரிசு - ரூ.15,000/- பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தவும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கமாகும். அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் இப்போட்டியில் பங்கேற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/state-level-short-film-competition-for-college-students-first-prize-of-rs-50000




