செயின்ட் கிட்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் - ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் - ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ட்ரின்பகோ பந்து வீச்சை தேர்வுசெய்தது. இதையடுத்து களமிறங்கிய பார்படோஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் வெற்றி இதனை தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பகோ 14.5 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பார்படோஸ் ட்ரைடென்ட்சை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-trinbago-stun-barbados-with-big-win




