சென்னை, ஒகேனக்கல் காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 298 கனஅடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப் படி வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியானது. இரவு 9 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பு இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் ந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-hogenakkal-has-increased-to-12000-cubic-feet-per-second




