புதுடெல்லி, இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மீண்டும் இந்தியாவின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிக்கு திரும்புவதற்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு முன்பு ஹார்திக் மேலும் சில போட்டிகளில் விளையாடி தனது ஆட்டத்திறனை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியின் வளர்ச்சிக்கும் இந்திய அணி அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கம்பீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சில நேரங்களில் இருவரையும் கூட ஒரே ஆடும் லெவனில் களமிறக்கலாம். ஆனால் தற்போது ஹார்திக் பாண்டியாவால் 10 ஓவர்கள் வீச முடியாது. மேலும், ஐ.பி.எல். தொடருக்குப் பிறகு அவர் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. எனவே, சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு முன்பு ஹார்திக் பாண்டியா போதுமான அளவு போட்டிகளில் விளையாட வேண்டும். அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி, தனது உடற்தகுதியை நிரூபிப்பது முக்கியம். சர்வதேச கிரிக்கெட்டில் அவரை அவசரமாக களமிறக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில், சர்வதேச கிரிக்கெட் உங்கள் உடலுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். எனவே, அவர் இந்தியா ஏ அணிக்காக நடைபெறும் தொடர்களில் விளையாடினால், நிச்சயமாக அவருக்கு போதுமான போட்டி அனுபவமும் கிடைக்கும்.அதன் மூலம் அவர் மீண்டும் முழுமையாக தயாராக முடியும். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அவரை பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யலாம். என்று கவுதம் கம்பீர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/will-hardik-pandya-return-to-the-indian-team-gautam-gambhir-shares-key-information




