சென்னை, சமையலுக்கு பிரதானமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை சமீபகாலமாக விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த மாதம் இறுதியில் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரித்து ரூ.60 வரை விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்து ரூ.70 வரை விற்பனை ஆகிறது. வெளிச்சந்தையில் முக்கிய காய்கறிகள் விலை உயரும்போது, அதை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. அந்த வகையில், ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி கூறியதாவது:- பொதுமக்களுக்கு வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, 'நாபெட்' எனப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம், முதல் கட்டமாக, 70,000 கிலோ வெங்காயம் வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து கிடைத்ததும், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இந்த வெங்காயம் விற்கப்பட உள்ளது. ஒரு கிலோ, ரூ.30 முதல் ரூ.40-க்குள் விற்பனை செய்யப்படும். என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-sales-at-ration-shops-central-government-to-supply-70000-kg




