கடந்த பிப்ரவரி மாதம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யைப் பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமெனவும், ஒரு நடிகையுடன் திருமணம் மீறிய உறவில் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார் சங்கீதா. ஏப்ரல் 20, ஜூன் 15, ஆகஸ்ட் 7 என இந்த விவாகரத்து வழக்கில் இதுவரை மூன்று முறை நீதிமன்ற விசாரணை நடந்தது. முதல் இரண்டு முறை விஜய், சங்கீதா என இரு தரப்பும் ஆஜாராகவில்லை. விஜய் - சங்கீதா ஆகஸ்ட் 7-ம் தேதியிலான விசாரணையில் சங்கீதா மட்டும் காணொளிக் காட்சி மூலம் ஆஜராகி இருந்தார். விஜய்யிடம் இருந்து விவாகரத்து, நிரந்த ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமை வேண்டும் என ஆரம்பத்திலிருந்து இந்த விவாகரத்து வழக்கில் சங்கீதா முனைப்புடன் இருக்க, விஜய் தரப்பு இந்த வழக்கில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், தற்போது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் சங்கீதா. இதையடுத்து, விஜய் - சங்கீதா வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக செங்கல்பட்டு குடும்ப நலநீதிமன்றம் அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/lifestyle/relationship/sangeetha-withdraws-divorce-petition-against-cm-vijay




