சென்னை, மோதிரம் கொடுக்கும் கைகள், பாதுகாப்பான பிரசவத்தையும் உறுதி செய்ய வேண்டும் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- வேதனை திருமங்கலத்தில் அரசு மருத்துவமனையில் இன்று குழந்தையை பெற்றெடுத்த தாய் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. ஒரு குழந்தையின் பிறப்பு ஒரு குடும்பத்திற்கு மகிழ்ச்சியின் தருணமாக இருக்க வேண்டும்; அது எந்தக் குடும்பத்திற்கு இழப்பின் தருணமாக மாறக்கூடாது. மேம்படுத்த வேண்டும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக பொருட்செல்லில் மோதிரம் வழங்கப்படுகிறது. ஆனால் போதிய நிதி ஒதுக்கி மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். திருமங்கலம் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்: • 24 மணி நேர அவசர மகப்பேறு சிகிச்சை வசதிகள் • தாய்மார்களுக்கான உயர்தர அவசர சிகிச்சைப் பிரிவுகள் • குழந்தைகளுக்கான பிரத்யேக தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகள் • பயிற்சி பெற்ற குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் நியோநேட்டாலஜிஸ்ட்கள் • சிறப்பு மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் போதுமான செவிலியர் பணியாளர்கள் • அவசரகாலத்தில் உடனடி இரத்தம் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகள் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். ஆட்சியின் அடையாளம் “மோதிரம் கொடுக்கும் கைகள், பாதுகாப்பான பிரசவத்தையும் உறுதி செய்ய வேண்டும்.” ஆட்சியின் அடையாளம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாகவும், ஒவ்வொரு தாயும் பாதுகாப்பாகவும் வீடு திரும்பும் நிலையை உருவாக்குவதே உண்மையான மக்கள் நல ஆட்சியின் அடையாளம். இந்த சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, தேவையான மருத்துவ மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே நமது ஆதங்கமும் கோரிக்கையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் அரசு மருத்துவமனையில் இன்று குழந்தையைப் பெற்றெடுத்த தாய் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. ஒரு குழந்தையின் பிறப்பு ஒரு குடும்பத்திற்கு மகிழ்ச்சியின் தருணமாக இருக்க வேண்டும்; அது எந்தக் குடும்பத்திற்கு இழப்பின் தருணமாக மாறக்கூடாது. அரசு… — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) September 29, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/hands-that-give-rings-must-ensure-safe-delivery-tamilisai-soundararajan




