புதுடெல்லி, வானிலை மாற்றங்களை, 6 கி.மீ., சுற்றளவுக்குள், துல்லியமாக கணிக்கும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு மையம், 'பாரத் பி.எஸ்., என்ற, 'பாரத் முன் அறிவிப்பு மையம்' என்ற, அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்தியாவின் காலநிலை, பருவமழை மாற்றங்களை அறிவதற்காக வடிவமைக்கப்பட்ட, பாரத் பி.எஸ்., எனும், 'பாரத் போர்காஸ்ட் சிஸ்டம்' என்ற அமைப்பு, மிகவும் துல்லியமாக செயல்படத் தொடங்கி உள்ளது. நிகழ்நேர வானிலை கணிப்பு நாட்டின் இமயமலை, மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றால் ஏற்படும் வானிலை மாறுபாடுகளை அறிய, இது உதவியாக உள்ளது. ஏற்கனவே உள்ள ஜி.எப்.எஸ்., டி1 - 534 எனும் அமைப்பு, 12 கி.மீ., சுற்றளவில் மட்டுமே தகவல்களை தந்தது. மற்ற முன்னணி நாடுகளின் அமைப்புகள், 9 கி.மீ., சுற்றளவில் செயல்படுகின்றன. இந்நிலையில், 'டிகோ' எனும் கணித நுட்பத்தை பயன்படுத்தி, 6 கி.மீ., சுற்றளவில், நிகழ்நேர வானிலை கணிப்புகளை தரும் ஒரே நாடாக இந்தியா மாறி உள்ளது. இந்த புதிய அமைப்பால், பருவமழை காலங்களில், அதி தீவிர மழை உள்ளிட்டவற்றை கூடுதல் துல்லியத்துடன் அறிய முடியும். மேலும், வானிலை முன்னறிவிப்பை வெளியிடும் நேரம், 3 - 6 மணி நேரமாக குறையும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/new-technology-introduced-to-provide-accurate-weather-information




