டோக்கியோ, ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:- வில்வித்தை: காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் அரையிறுதியில் இந்தியா-தென்கொரியா, அதிகாலை 5.55 மணி, காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியா-தாய்லாந்து, காலை 7.55 மணி, காம்பவுண்ட் ஆண்கள் அணிகள் அரையிறுதியில் இந்தியா-தென்கொரியா, காலை 10.55 மணி. ஆக்கி: பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியா-தென் கொரியா, மாலை 3.30 மணி. ஜூடோ: பெண்கள் 48 கிலோ எடைப்பிரிவில் தொடக்க சுற்று, அஸ்மிதா தேவ், காலை 7.30 மணி முதல். துப்பாக்கி சுடுதல்: ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தனிநபர் தகுதி சுற்று, அனிஷ் பன்வாலா, காலை 6.10 மணி, டிராப் கலப்பு அணிகள் தகுதி சுற்று, நீரு தண்டா, கைனன் செனாய், காலை 6.30 மணி. ஸ்குவாஷ்: பெண்கள் அணிகள் காலிறுதியில் இந்தியா-சிங்கப்பூர், காலை 6.30 மணி, ஆண்கள் அணிகள் காலிறுதியில் இந்தியா-குவைத் காலை 11 மணி. மல்யுத்தம்: பெண்கள் 68 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று, நிஷா தாஹியா (இந்தியா) - பாக் சோல் கும் (வடகொரியா) காலை 7 மணி, ஆண்கள் கிரிகோ ரோமன் 87 கிலோ காலிறுதி, சுனில் குமார், காலை 7.45 மணி. குத்துச்சண்டை: பெண்கள் 60 கிலோ அரையிறுதியில் பிரியா கங்ஹாஸ் (இந்தியா)-யாங் செங்யு (சீனா), காலை 10.15 மணி, பெண்கள் 75 கிலோ அரையிறுதியில் லவ்லினா (இந்தியா)-நாதல்யா போக்டனோவா (கஜகஸ்தான்), காலை 10.45 மணி, ஆண்களுக்கான 90 கிலோ அரையிறுதியில் கபில் போக்காரியா (இந்தியா)- துராபெக் கபிபுல் லாவ் (உஸ்பெகிஸ்தான்), பகல் 12 மணி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-key-india-events-today-2




