டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ இயக்கம் ‘பொய்களின் கூச்சல்’ (ஜூட் கி கூஞ்ச்). உண்மையின் கம்பீரமான கர்ஜனைக்கு முன்னால் பொய்யான உரத்த சத்தங்கள் நிலைத்து நிற்க முடியாது. கடந்த 2013-ம் ஆண்டு இதே கல்லூரி மேடையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பேசினேன். அன்று நான் அளித்த வாக்குறுதிகளையும், நாட்டின் தற்போதைய வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க எனக்குத் தைரியம் இருக்கிறது. பிரதமர் மோடி 2013-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் 10 சதவீதமாக உயர்ந்து, ஊழல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நிறைந்திருந்தது. இன்று உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் தான் குறிப்பிட்ட 'சிந்தனைவாதி நக்சல்கள்' (திமாகி நக்சல்) என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது. அந்த மருந்து அளிக்கப்பட்டவுடன், நோயின் அறிகுறிகள் வெளியே வருவது போல, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் இப்போது தங்களின் உண்மையான முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புத்துறை பலமடைந்துள்ளதுடன், நாட்டில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். `ராகுல் காந்தி தளபதியின் கைப்பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார்' - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/pm-modi-addressed-universitys-centenary-event-in-delhi




