கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. கொரோனா தடுப்பூசி சர்ச்சை கருத்து கடந்த 2021-ஆம் ஆண்டு, கோவிட் பெருந்தொற்று காலத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு, நடிகர் விவேக், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர்களிடம், கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதாக கூறி, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல், தவறான கருத்துகளை பொதுமக்களிடையே பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பாத நிலையில், தனது பேட்டியை தவறாக புரிந்து கொண்டதாகவும் கூறியிருந்தார். வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/corona-vaccine-controversy-chennai-high-court-quashes-case-against-actor-mansoor-ali-khan




